/files/aayiram-santhosha-ilaigal_FrontImage_974_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஆயிரம் சந்தோஷ இலைகள்

(0)
கவிதைகள்
Price: 250.00

Book Type
கவிதைகள்
Weight
300.00 gms
ஷங்கரின் கவிதை நடை, புனைகதையின் தசைநார்களை ஒதுக்கிவிட்டு கவித்துவத்தின் நரம்புகளால் மட்டுமே விசித்திரமாக ஓர் உயிரை நடமாடச் செய்யும் வித்தை. காமமும் மரணமும் சரிநிகராக இவர் கவிதைகளில் கூர்மையாகக் கண்சிமிட்டிக் கொண்டேயிருக்கின்றன. இவ்விரண்டுக்குமே நித்தியத்தை விரும்புகிற மனித எத்தனங்களைத் தீண்டி உலுக்குகிற குணம் உண்டு. காமத்தையும் மரணத்தையும் வயல்களாக உழுது அறுவடை செய்கிற நுட்பமே அவற்றைச் சிந்தித்து வரையறை செய்து சூத்திரமாக்கி கவிதையாக வைத்துக்கொள்வதும். அவ்வகையில் மரணம், பிரயாண ஞாபகத்தை யாரிடமும் பகிர இயலாமல் ஆக்கும், தனித்தன்மையைப் போன்ற ஒரு மாய நகரமாகிறது. அவருக்கு, காமம் புழக்கடைப் பாத்தியில் முறைவிட்டிருக்கும் பசிய இலைகளாக ஒளிர்கின்றன.

- கவிஞர் ஸ்ரீநேசன்

மானுடம் கொள்ளும் சுயநலம், ஆக்கிரமிப்பு வெறி மற்றும் அழிவுமூர்க்கத்தின் ஒரு முகமையாக, பயனாளியாக, அழகாக நான் இருக்கிறேன். அந்தப் பிரக்ஞையுடனேயே என்னை மிதித்தும் எதிர்த்தும் இந்தப் பூமியைத் துறந்து பறக்க முயலும் குற்றத்தரப்பாக எமது காலத்திய கவிதைகளை வளர்ப்பது , எம் தலைமுறைக் கவிஞர்களின் ஆசையாக உள்ளது. சில நேரங்களில் எங்கள் கவிதைகள் அபூர்வமாகப் பறக்கவும் செய்கின்றன. அருகிப்போன உயிர்களையும் எறும்புகள் போன்ற சிறு உணர்வுகளையும் என் உலகில் அறிமுகமாகும் புதிய பொருள்களையும் அவற்றின் முன் நான் கொள்ளும் துடிப்பையும் கொண்டு சேர்த்து உருவாக்கும் சிறு பிரபஞ்சமாக இருக்கின்றன எனது கவிதைகள். 

- ஷங்கர்ராமசுப்ரமணியன்
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.