கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படியே . உடல் நன்றாக மூடப்பட்டிருந்தது. கைரேகைகள் பதிவதைப்பற்றி அவன் கவலைப்படுகிறவனாகத் தெரியவில்லை.