நம்மால் முடியும்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நம்மால் முடியும்

Nammaal mudiyum
Weight
250.00 Gms
இந்தப் புத்தகம் வெளிவந்து மூன்று மாதங்களில் அதிபர் தேர்தலுக்கான தன் பிரசாரத்தைத் தொடங்கினார் பராக் ஒபாமா. அதற்குப் பிறகு நடந்தது, வரலாறு.
அமெரிக்கர்களை அதிகம் பாதித்த புத்தகங்களுள் இதுவும் ஒன்று என்று நிச்சயமாகச் சொல்லமுடியும். தன் வாழ்க்கையைப் பற்றியும் அரசியல் பார்வையைப் பற்றியும் ஒபாமா மிக விரிவாக இதில் பதிவு செய்திருக்கிறார் என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம், அமெரிக்காவுக்குத் தன்னால் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரமுடியும் என்பதை மிக விரிவாக இதில் அலசியிருக்கிறார். அந்த வகையில், இது அமெரிக்காவுக்கான ஒபாமாவின் அரசியல், சமூக, பொருளாதாரச் செயல் திட்டம் என்று சொல்லமுடியும்.
ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக ஒபாமா பரிணமித்த கதை இது. முதல் முறையாக, செனட் தேர்தலில் நின்ற கதை; மேற்கொண்ட பிரசார யுத்திகள்; எதிர்க்கட்சியின் தில்லுமுல்லுகளையும் மீறிக் கிடைத்த மக்கள் வரவேற்பு; பரபரப்பான அரசியல் வாழ்க்கை; குடும்பம், மனைவி, குழந்தைகள் என ஒபாமா குறித்த ஒரு முழுமையான பிம்பம் இதில் கிடைக்கிறது. தவிரவும், 19-ம் நூற்றாண்டில் நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கி இன்றைய தாலிபன் அச்சுறுத்தல்வரை, அமெரிக்காவைப் பாதித்த அத்தனை நிகழ்வுகளையும் ஒபாமா இதில் அலசுகிறார்.
அமெரிக்காவின் சாதனைகளைப் பட்டியலிடும் அதே சமயம், அமெரிக்காவின் தவறுகளையும் அழுத்தமாகவே சுட்டிக்காட்டுகிறார். அதே போல், தனக்கு முந்தைய அதிபர்கள் பற்றிய தன் அபிப்பிராயங்களை உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்தவும் அவர் தயங்கவில்லை.
ஒபாமாவை மட்டுமல்ல அமெரிக்காவையும் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.