Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சாமிநாதம்

(0)
Saminatham
Price: 1,000.00

Weight
1700.00 gms

சாமிநாதம் :

பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்னணியில் உருவான அச்சுச் சாதன வெள்ப்பாட்டு வடிவங்களுள் ஒன்று “ புத்தகங்கள் “. தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறு குறித்த முழு விவாதத்திற்கு ஆவணமாகத் திகழ்பவை இவை. இந்த அச்சேறிய நூல்களின்வழி அறிவுத் தனத்தைப் பொதுவெளியில் பரப்புவதற்கு முயன்ற ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர்.பழந்தமிழ் நூல் பதிப்பு முன்னோடிகளுள் ஒருவரான மஹாமஹோபாத்தியாய தாகூஷிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர், ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, ‘மனோன்மணீயம்சுந்தரம் பிள்ளை என மகத்தான சாதனையாளர்கள் வலம்வந்த சூழலில் உ.வே.சா. என்னும் ஆளுமை உள் நுழைந்தபோது ஆரோக்கியமான அதிர்வுகளும் அடுத்த கட்டப் பாய்ச்சலும் தமிழ்ப் பதிப்புலகில் நிகழ்ந்தன. இவற்றை எல்லாம் அறிந்துகொள்வதற்கு நூல்களில் இடம்பெறும் அவரது முகவிரைகளே துணை. தமிழ் நெடும்பரப்பு முழுவதையும் பெரும் புலமையாளர்களிடமிருந்து கற்று, புதிய பதிப்பு நுட்பங்களை நவீனத்துவ வருகையினால் பெற்று, பண்பாட்டு விழுமியங்களை நுணுகித் தேடித் தமிழுக்கு அணிசேர்த்த நுண்மாண் நுழைபுலத்தை அவரது முகவுரைகள் வழியாக்க் கண்டறிய இயலும். ‘ ஐயர் பதிப்புஎன்னும் அடைமொழியோடு உ.வே.சா.வின் பதிப்பைக் கொண்டாடும் நாம் அந்தப் பதிப்புச் செம்மையை படிநிலை மாற்றத்தைப் புரிந்துகொண்டு பதிப்புக் கோட்பாட்டை உருவாக்கவும் அதனூடே ஒரு ‘ மாதிரிப் பதிப்பை ‘ அமைக்கவும் பெரிதும் துணைபுரிவன இம்முன்னுரைகள்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.