கலையம்சமும் ஜனரஞ்சகத் தன்மையும் அற்புதமாகக் கூடி முயங்கிய வெற்றித் திரைப்படம் ஆடுகளம். இத்திரைப்படம் எடுக்கப்படுவதற்காக இயக்குநர் வெற்றி மாறனால் எழுதப்பட்ட திரைக்கதையின் புத்தக வடிவம் இது.ஒரு சிறந்த திரைப்படப் படைப்பாளியின் பார்வையிலிருந்து திரைப்பட மொழியில் உருவான திரைக்கதை.ஒரு திரைக்கதை எவ்வளவு நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டிருந்தாலும்,அதன் களத்தில் காட்சிப்படுத்தப்படும் போது சில மாற்றங்களுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது.மனதில் கருவும் உருவும் கொண்ட கதை உலகம்,களத்தில் வடிவம் பெறும்போது,களத்தின் சாதக பாதங்களுக்கேற்ப சில மற்றங்களுக்கு உள்ளாகிறது.