கலாம் ஒரு சரித்திரம்.
’ஏவுகணை நாயகன்’ ’மக்களின் ஜனாதிபதி’ ‘இளைஞர்களின் விடிவெள்ளி’ போன்ற அடைமொழிகளால் காக்கப்பட்டவர் அப்துல் கலாம். மாணவர் சமுதாயத்தின் மீது அளப்பாரிய பிரியம் வைத்திருந்த அவரது இறுதி மூச்சு, அவர்கள் மத்தியிலேயே பிரிந்தது. எளிய குடும்பத்தில் பிறந்து மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப் பெற்ற அந்த மாமனிதருக்காக இந்தியாவே அழுதது. ‘இன்னொரு மகாத்மா’வாக வாழ்ந்த அவரது எளிமை, நேர்மை, தூய்மை போன்ற நெறிகளை எதிர்கால சந்ததியினர் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற நோக்கில் அவரது வரலாற்றை ‘கலாம் ஒரு சரித்திரம்’ என்ற தலைப்பில் அமுதன் எழுதியுள்ளார்.
துரை மண்ணின் மைந்தரான அமுதனின் இயற்பெயர் எம்.தனசேகரன். ‘தினத்தந்தி’ செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர்.
தஞ்சைப் பெரிய கோவில் பற்றி இவர் எழுதிய ‘ஆயிரம் ஆண்டு அதிசயம்’ என்ற நூல் வெளியான சில மாதங்களிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்று விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. கலாம் ஒரு சரித்திரம்’ஏவுகணை நாயகன்’ ’மக்களின் ஜனாதிபதி’ ‘இளைஞர்களின் விடிவெள்ளி’ போன்ற அடைமொழிகளால் அடைகாக்கப்பட்டவர் அப்துல் கலாம். மாணவர் சமுதாயத்தின் மீது அளப்பாரிய பிரியம் வைத்திருந்த அவரது இறுதி மூச்சு, அவர்கள் மத்தியிலேயே பிரிந்தது. எளிய குடும்பத்தில் பிறந்து மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப் பெற்ற அந்த மாமனிதருக்காக இந்தியாவே அழுதது. ‘இன்னொரு மகாத்மா’வாக வாழ்ந்த அவரது எளிமை, நேர்மை, தூய்மை போன்ற நெறிகளை எதிர்கால சந்ததியினர் பின்பற்றி நடக்க வேண்டும் என்ற நோக்கில் அவரது வரலாற்றை ‘கலாம் ஒரு சரித்திரம்’ என்ற தலைப்பில் அமுதன் எழுதியுள்ளார்.மதுரை மண்ணின் மைந்தரான அமுதனின் இயற்பெயர் எம்.தனசேகரன். ‘தினத்தந்தி’ செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர்.தஞ்சைப் பெரிய கோவில் பற்றி இவர் எழுதிய ‘ஆயிரம் ஆண்டு அதிசயம்’ என்ற நூல் வெளியான சில மாதங்களிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்று விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.