கவியரசு கண்ணதாசன் கதை
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கவியரசு கண்ணதாசன் கதை

kaviyarasu kannathasan kathai
Weight
430.00 Gms

 

Book Title :கவியரசு கண்ணதாசன் கதை
Author :வணங்காமுடி
ஆசிரியர் :சு. ராமகிருஷ்ணன்

புத்தகத்தை பற்றி


தத்துவங்களை எளிய முறையில் பாமரனுக்கும் எடுத்து சொன்ன பெருமை கவிஞர் கண்ணதாசனுக்கு உண்டு. பள்ளிப் படிப்பை அவர் தொடரவில்லை என்றாலும், புத்தகப்படிப்பு அவரை வாழ்க்கையில் உச்சத்தில் உயர்த்தியது. கம்பராமாயணத்திற்கு தமிழில் உரை எழுதிய, அத்தனை உரை ஆசிரியர்களின் உரையை கண்ணதாசன் மனப்பாடமாகக் கூறுவார். மேலும் கம்பராமாயணத்தில் இடம்பெற்று இருக்கும் கவிதைகளை அதன் வரிசை எண் கூறினால் அந்த கவிதையை ஏற்ற இறக்க சந்தங்களுடன் துல்லியமாக பாடும் திறனைப் பெற்றிருந்தார். உருது மொழிக்கவிஞர் ஒருவர், கவிஞர் கண்ணதாசனை பற்றி கூறும்பொழுது கண்ணதாசன் படித்தது, நூல்களை அல்ல! நூலகங்களை என்று கூறினார்.! பிரபல மனநல மருத்துவர் மற்றும், மனோத்தத்துவ நிபுணர், “டாக்டர். ருத்ரன், அவர்கள் எழுதியுள்ள புத்தகத்தின் முகவுரையில், தமிழில் எழுதும் நேர்த்தியை எனக்கு கற்றுத்தந்த மகாகவி கண்ணதாசனுக்கு காணிக்கை என்று கூறியுள்ளார்”. மனநலம் பற்றி அவர் எழுதியுள்ள புத்தகத்தில் பல அறிய கருத்துக்களை கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் மூலமாகவே மேற்கோள் காட்டுகிறார். கண்ணதாசன் பாடல்களின் முதல் வரிகளையே தன் புத்தகத்திற்கு தலைப்பாக தேர்ந்தெடுத்திருக்கிறார் டாக்டர். ருத்ரன். (மனம் என்னும் மேடை, உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால், வாழ நினைத்தால் வாழலாம்). இது மனநல மருத்துவரின் மனதில் கண்ணதாசன் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம். புத்தகம் படிக்கும் பழக்கத்தை மற்றவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்கள் படிக்க நினைக்கும் புத்தகங்கள் அந்த புத்தகம் கிடைக்கும் இடம், அது பற்றிய தகவல்களைக் கவிஞர் கண்ணதாசன் கடிதம் மூலம் தெரிவிப்பார். சிலருக்கு புத்தகங்களை இலவசமாக அனுப்பி வைப்பார். “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” கவியரசர் அவர்களின் என்றும் வாழும் இந்த வரிகள் அவருடைய புத்தக அறிவு வாழ்க்கை அனுபவ அறிவின் வெளிப்பாடே என்றால் அதுமிகையல்ல!.

ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் இத்தனை ஏற்றத் தாழ்வுகள், ஏமாற்றங்கள், துரோகங்கள்- நடக்க முடியுமா?- இவ்வாறு தமிழ் நெஞ்சங்களை இன்றும் வியக்கவைக்கும் கவியரசரின் வாழ்க்கை அனுபவங்கள்தாம் அவரது ஆயிரக்கணக்கான பாடல்கள், அர்த்தமுள்ள இந்து மதம் முதலான நூல்களாகப் பரிணமித்தன. கவியரசரின் வாழ்க்கை எத்தனையோ திருப்பங்கள் நிறைந்த- மற்றவர்க்கும் பாடமாக வேண்டிய நிகழ்வுகளும் அமைந்த வாழ்க்கையாகும். எனவே விடுபட்டுப்போன நிகழ்வுகள், பதிவுகள், கவிஞரோடு பழகியவர்களின் பேட்டிகள், புக‌ைப்படங்கள் ஆகியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்த வாழ்க்கை வரலாற்று நூல், கவியரசரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூலாகும்

Book Name                        : viduthalai pulikalukku appal

Book writer                        : raajiv sarmaa

Translator                          :Anantharaj

Buy Tamil Books :Available

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.