Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

கூலித்தமிழ்

kooli thamizh
Weight
380.00 Gms

ஒரு சமுதாயம் கடந்து வந்த கற்களாலும் முட்களாலும் வேயப்பட்ட பாதை மட்டுமல்லாது, கண்ணீரிலும் செந்நீரிலும் மெழுகப்பெற்று பல்லாயிரம் உயிர்களை காவு கொண்ட பாவ யாத்திரையின் வரலாற்றுப் பதிவே கூலித்தமிழ். தமிழகத்தின் வானம் பார்த்த பூமியில் வரண்டுபோன கண்மாயைகளையும் பஞ்சம் பரிதவிக்கும் முகங்களையும் பார்த்து கதியற்று நின்றவர்கள், அடிமைகளாகக் கடத்தப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட சரித்திரங்களின் மீள் ஆய்வின் வீரியமிக்க சிதறல்களே மு.நித்தியானந்தனின் கூலித்தமிழ்..
மு.நித்தியானந்தன் பற்றி அறியாத கற்றறிவாளர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் இருப்பது சாத்தியமல்ல... பதுளை மண்ணின் மைந்தனாக மலையகத்தின் வார்ப்பாக பரிணமித்த இவர் பத்திரிகையாளராக, பதிப்பாளராக, எழுத்தாளராக, விரிவுரையாளராக, ஆராய்ச்சியாளராக பண்வளங்கள் கொண்டவர்.
இவரின் "ஒரு பதுளைக்காரனின் இலக்கிய பதிவு – துங்கிந்த சாரலில்...” ஆய்வுத் தொடராக வெளிவந்த போது "பாலை மணலில் மழைத்தது போல..." ஒரு தேக்க நிலையில் ஸ்தம்பித்துக் கிடந்த மலைநாட்டு எழுத்துலகை ஒரு சிலிர்ப்போடும் விதிர்ப்போடும் திடுக்கிடச் செய்து சுயதரிசனம் செய்து வைத்தது. அதற்குப் பின்னரே அதையொட்டிய எழுத்துக்களும் அந்த ரீதியிலான தேடல்களும் மலையக எழுத்துலகின் தேக்கத்தை மீட்டு சலனத்தை யும் புதுப்பொழிவையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
அதே உத்வேகத்தோடும் மு.நித்தியானந்தன் அண்மைக்காலங்களில் எழுதி சென்னை க்ரியா மூலமாக வெளியிட்டுள்ள 'கூலித்தமிழ்' கட்டுரைகளின் தொகு ப்பு மலையக வரலாற்று வடிவமாக பரிண மிக்கின்றது. மலையகம் கடந்து வந்த காற்றாற்று ெவள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வரலாற்று சாட்சியாக நிற்கின்றது "கூலித் தமிழ்".

      ஒரு சமுதாயம் கடந்து வந்த கற்களாலும் முட்களாலும் வேயப்பட்ட பாதை மட்டுமல்லாது, கண்ணீரிலும் செந்நீரிலும் மெழுகப்பெற்று பல்லாயிரம் உயிர்களை காவு கொண்ட பாவ யாத்திரையின் வரலாற்றுப் பதிவே கூலித்தமிழ். தமிழகத்தின் வானம் பார்த்த பூமியில் வரண்டுபோன கண்மாயைகளையும் பஞ்சம் பரிதவிக்கும் முகங்களையும் பார்த்து கதியற்று நின்றவர்கள், அடிமைகளாகக் கடத்தப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட சரித்திரங்களின் மீள் ஆய்வின் வீரியமிக்க சிதறல்களே மு.நித்தியானந்தனின் கூலித்தமிழ்..
nbsp;     மு.நித்தியானந்தன் பற்றி அறியாத கற்றறிவாளர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் இருப்பது சாத்தியமல்ல... பதுளை மண்ணின் மைந்தனாக மலையகத்தின் வார்ப்பாக  பரிணமித்த இவர் பத்திரிகையாளராக, பதிப்பாளராக, எழுத்தாளராக, விரிவுரையாளராக, ஆராய்ச்சியாளராக பண்வளங்கள் கொண்டவர்.
வரின் "ஒரு பதுளைக்காரனின் இலக்கிய பதிவு – துங்கிந்த சாரலில்...” ஆய்வுத் தொடராக வெளிவந்த போது "பாலை மணலில் மழைத்தது போல..." ஒரு தேக்க நிலையில் ஸ்தம்பித்துக் கிடந்த மலைநாட்டு எழுத்துலகை ஒரு சிலிர்ப்போடும் விதிர்ப்போடும் திடுக்கிடச் செய்து சுயதரிசனம் செய்து வைத்தது. அதற்குப் பின்னரே அதையொட்டிய எழுத்துக்களும் அந்த ரீதியிலான தேடல்களும் மலையக எழுத்துலகின் தேக்கத்தை மீட்டு சலனத்தை யும் புதுப்பொழிவையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
nbsp;   அதே உத்வேகத்தோடும் மு.நித்தியானந்தன் அண்மைக்காலங்களில் எழுதி சென்னை க்ரியா மூலமாக வெளியிட்டுள்ள 'கூலித்தமிழ்' கட்டுரைகளின் தொகு ப்பு மலையக வரலாற்று வடிவமாக பரிண மிக்கின்றது. மலையகம் கடந்து வந்த காற்றாற்று ெவள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வரலாற்று சாட்சியாக நிற்கின்றது "கூலித் தமிழ்".

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.