இலக்கியப் படைப்பாளியான கண்மணி குணசேகரன் பல்லாண்டுகள் உழைத்து இந்த அகராதியைத் தொகுத்திருக்கிறார். போக்குவரத்துத் துறைத் தொழிலாளியாகக் கடும் பணிச்சுமைகளுக்கு நடுவிலும் அயராது இதை உருவாக்கியிருப்பது ஒரு தனிமனித சாதனைதான். பல்கலைக் கழகங்களின் கடமை இது.
இந்தச் சொற்களஞ்சியத்திற்கு மேலதிகச் சிறப்புகள் உண்டு சொல் பழமொழி மரபுத் தொடரை விளக்க சொற்றொடரை உருவாக்கும்போது அதை ஒற்றைவரிக் கதையாக மாற்றிவிடுகிறார்.