பிழையின்றி தமிழ் எழுத பேச
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

பிழையின்றி தமிழ் எழுத பேச

pizhaiyindri thamizh ezhutha pesa
Weight
300.00 Gms

மாணவர்கள் இவ்வாறெல்லாம் பிழைகள் செய்யக் காரணம்,அவர்கள் ஆரம்ப நிலையில் எழுத்துகளை நன்கு கற்றுக் கொள்ளாததே என்பது யாவரும் அறிந்த உண்மை. ‘இதற்கு முதலில் எழுத்துகளைக் கற்பித்த ஆசிரியர்களே பொறுப்பாவர்’என்று எளிதாக அவ்வாசிரியர்கள் மேல் பழி போட்டு விடலாம்!ஆனல் அதில் முழு நியாயம் இருப்பதாய் தோன்றவில்லை.எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மதிரியான நுண்ணறிவு இருப்பதில்லை.சில குழந்தைகள் சொல்வதை  பற்றிக் கொள்கின்றனர்.சில குழந்தைகளால் பன்முறை சொன்னாலும் அவற்றை பற்றிக் கொண்டு, மனதில் பதிய வைத்துக் கொள்ள இயல்வதில்லை.

எனவே,சில குழந்தைகள் தாம் விரைவில் எழுத்துகளை நன்கு கற்றுக் கொள்கின்றன.சிலர் பல முறை கூறி எழுத வைத்த பின்னரே கற்றுக் கொள்கின்றனர்.மற்றும் சிலர் இடைவிடாது பல நாட்கள் பயிற்சி கொடுத்த பின்னரே கற்றுக் கொள்கின்றன.ஆகவே, ‘எழுத்தறிவுக்கும் பணி எளியதொன்றன்று’என்பதை நாம் உணர்ந்து கொண்டால்,முழுப் பழியையும் முதலில் எழுத்துகள் கற்பித்த ஆசிரியர் மேற் சுமத்த மாட்டோம்.

எழுத்துகளை நன்கு தெரிந்து கொண்ட பின்னரே மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வருவதில்லை.ஓரளவு தெரிந்து கொண்ட மாணவர்களும்,அரை குறையாகத் தெரிந்து கொண்டவர்களும்,எழுத்துகளைச் சேர்த்தெழுதும்போது பிழை செய்பவர்களும் ஆக, பலவகை எழுத்துப் பிழைகள் செய்பவர்களே ஆறாம் வகுப்பில் வந்தமர்கின்றனர்.ஆகவே,அவர் செய்யும் எழுத்துப் பிழைகளை நீக்கச் சிலவகை முயற்சிகள் தேவைப்படுகின்றன.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.