சேரமான் காதலி
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

சேரமான் காதலி

seraman kathali
Weight
550.00 Gms

 

நூலின் பெயர் : சேரமான் காதலி
ஆசிரியர் பெயர் : கவியரசு கண்ணதாசன்
நூலின் பெயர் : சேரமான் காதலி

ஆசிரியர் பெயர் : கவியரசு கண்ணதாசன்


புத்தகத்தை பற்றி

கவிஞரின் கதைகளிலே சொக்கி போயிருக்கிறோம் அவரது கட்டுரைகளிலே கர்வம் கொண்டிருக்கிறோம்.அவரது கதைகள் நம்மை கண்கலங்க வைத்திருகின்றன,அவரது சமூக நாவல்கள் நம் சிந்தனைக்கு விருந்தாகவும்,சீர்திருத்த வாளாகவும் விளங்கி இருகின்றன இவை அத்தனையும் ஓன்று சேர்த்தால் எப்படி இருக்கும் அத்தான் சேரமான் காதலி


ஆசிரியர் குறிப்பு

1949ல் “கன்னியின் காதலி” என்ற படத்துக்குத் தனது கன்னிப் பாடலை எழுதியதன் மூலம் சினிமாப் பாடலாசிரியராக அறிமுகமானார். நவரசங்களையும் அதற்கு அப்பாலும் தொட்டு பாடல் எழுதி தனது காவியங்களால் மானிட உள்ளங்களில் மதிப்போடு கட்டுண்டார். அவரது வரிகள் இதயங்களை இதமாகக் கவர்ந்தன. கோவை செழியன் ‘கவிஞர்’ என்ற பட்டத்தை வழங்கி இவரைக் கெளரவித்தார். ஜமால் முஹம்மது கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நைனார் முஹம்மது ‘கவிசரசு’ என்ற பட்டத்தை வழங்கி மேலும் ஒருபடி உயர்த்திவிட்டார்.

தேசிய ஒற்றுமையை வளர்க்கும் பாடல்களை எழுதியமைக்காக 1970ல் இவர் தேசிய விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். சிறந்த சினிமா கவிஞருக்கான விருது வழங்கி 1971ல் தமிழக அரசு இவரைக் கெளரவித்தது. 1978ல் தமிழக அரசு ஆஸ்தான கவிஞராக இவரை நியமித்து மதிப்பளித்தது.

கவிஞர் கண்ணதாசன் தனது வாழ்நாளில் 4000 கவிதைகளையும் சுமார் 5000 சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார். 21 நாவல்கள் உட்பட 109 நூல்களை இவர் எழுதியுள்ளார். இவரால் எழுதப்பட்ட ‘சேரமான் காதலி’ எனும் நாவல் சாகித்திய எக்கடமி பரிசு பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் கவித்துவம் மட்டுமல்ல தெய்வீக மணம் கமழுவனவுமாகும். இறைவன் வாழும் இடங்கள் எவை என்பதையும் கூட மனக் கண்களால் கண்டு உணர்த்தியவர் அவர்.

 

 

 

Book Name : Seramaan kaathali 

Book writer : Kaviyarasu Kannadasan

Buy tamil Book   : Available

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.