வைரமுத்து கவிதைகள்
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்! தம்பீ! தமிழ்க் கவிதைத் தும்பீ! நீ புகழ்மலையின் உச்சிக்கே போய்விட்டாய்.